தமிழ்மொழிப்பாடத்தின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அரசின் முன்னெடுப்புகள் அதிகரிக்கும்! அன்வார் உறுதி

top-news

இன்று ஈவுட் தமிழ்ப்பள்ளியின் கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் அன்வார் நாட்டில் தமிழ் மொழிப்பள்ளிகளின் நிலைப்பாட்டை உறுதிச்செய்யும் வகையில் மடானி ஆட்சி இருக்கும் என நம்பிக்கை அளித்தார். இதன் முதற்கட்டமாக ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கவும் தாய்மொழிப்பள்ளிகளில் ஆசிரியர் குறைபாடுகள் இல்லாத அளவு அரசாங்கம் முன்னெடுக்கும் என அவர் உறுதி அளித்தார்

தாய்மொழிப்பள்ளிகளின் நிலைகள் குறித்து கல்வி அமைச்சு தனி கவனத்துடன் இயங்கும் என்றும், இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப்பாடத்திட்டத்தின் தேர்ச்சி விகிதம் மனநிறைவளிக்கும் வகையில் இருப்பதாகவும் தொடர்ந்து தேர்ச்சி விகிதம் முன்னேற்றம் காண்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அதற்கான ஆதரவை அரசாங்கம் முழுமையாக வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Datuk Seri Anwar Ibrahim mengumumkan kerajaan akan menambah latihan Bahasa Cina dan Tamil di institusi perguruan untuk melatih lebih ramai guru. Ini bertujuan meningkatkan penguasaan bahasa ibunda tanpa bertentangan dengan dasar negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *