RM 120,000 லஞ்சம் பெற்றதாக அதிகாரி கைது! - SPRM
- Thina S
- 11 Aug, 2024
சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்காக லஞ்சம் பெற்ற 30 வயதான தலைமை அரசு அதிகாரி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். KOTA KINABALU வில் உள்ள சொகுசு தங்கும் விடுதியில் 120,000 ரிங்கிட் லஞ்சம் பெறும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுப் பொருள்கள் தொடர்பான வரிகளை விலக்கு அளிக்க அவர் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
தலைநகரைச் சேர்ந்த அதிகாரி KOTA KINABALU க்குச் சுற்றுலாவுக்காகச் செல்வதாக விடுமுறை கோரியதை அடுத்து, சம்மந்தப்பட்ட அதிகாரியையும் சக ஊழியர்களையும் பின்தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டதாகவும் முறையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட 30 வயதான அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *