3500 வருடமாக பாதுகாத்த பழமையான பானையை உடைத்த இஸ்ரேல் சிறுவன்!

top-news
FREE WEBSITE AD


இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது ஹெக்ட் அருங்காட்சியகம் (Hecht Museum). இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிறைய சரித்திர பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதிலும், பல பொருட்கள் பாதுகாப்பு கண்ணாடிக்கு உள்ளே இல்லாமல், பாதுகாப்பு இன்றி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில், 4 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் அந்த ஹெக்ட் அருங்காட்சியகத்தை நேரில் காண வந்துள்ளார். அப்போது அங்கே சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பானை ஒன்றும் இருந்துள்ளது. அந்த பானைக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அந்த சிறுவனின் குழந்தை மனதில் உருவாகி உள்ளது.

இதனால் எந்த பாதுகாப்பு கண்ணாடியும் இல்லாமல் இருந்த அந்த பானையை சிறுவன் பிடித்து இழுக்க துண்டு துண்டாக உடைந்து போயுள்ளது. இதனை பார்த்ததும் அந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஆனால், சிறுவன் செயல் மீது அருங்காட்சியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் பாதுகாப்பு கண்ணாடி இருந்தால் பழமையான பொருட்களை மக்களால் சரிவர ரசிக்க முடியாது என்பதற்காக தான் எந்த தடைகளும் இன்றி அங்கே வெறுமென வைக்கப்பட்டிருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  பைபிள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த ஜாடி மது அல்லது ஆலிவ் எண்ணெய் மற்றும் சில இதர திரவங்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அதே போல நிபுணர் ஒருவரின் உதவியுடன் இந்த பானை மீண்டும் பழையது போல வடிவமைக்கப்படும் என்றும் அருங்காட்சிகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், தெரியாமல் ஜாடியை உடைத்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அது பழைய நிலையில் தயாரானதும் அருங்காட்சியம் வந்து பார்த்து செல்ல அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட அவரது தந்தை என்ன தான் மீண்டும் அந்த ஜாடியை சரி செய்தாலும் பழைய பொலிவு இருக்காது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *