அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்க்காத கொள்கையில் அசாம் பாக்கி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 26-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம்-இல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு தமது அனைத்து சேவைகளுக்கும் எந்த அங்கீகாரத்தையும் பாராட்டையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற கொள்கையில் டான்ஸ்ரீ அசாம் பாக்கி உறுதியாக உள்ளார்.

முழு நம்பிக்கையுடன் பணியாற்றி வெகுமதிகளையோ அல்லது பாராட்டையோ எதிர்பார்க்காமல் திறமைக்கு ஏற்றவாறு தமது பொறுப்புகளை நிறைவேற்றினால் போதுமானது என்று அந்த ஆணையத்திற்கு மீண்டு தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும் அவர் கூறினார்.

“நான் மரபை விட்டுச் செல்லவில்லை. எனக்கு அந்த நோக்கமும் இல்லை. எனது நண்பர்கள் கூட கூறினார்கள். டான் ஸ்ரீ நீங்கள் மரபை விட்டுச் செல்லப் போகிறீர்களா என்று. நான் இல்லை என்று கூறினேன். என் மனதில் இல்லை, என் இதயத்திலும் இல்லை. நான் இங்கே உண்மையில் கடவுளுக்கு மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன். மனிதர்களுக்காகவும் கடவுளுக்காகவும்," என்றார் அவர் அண்மையில் அளித்த நேர்காணலில் 62 வயதுடைய டான் ஸ்ரீ அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.

1984 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு அமைப்பில், பி.பி.ஆர்-இல் இன்ஸ்பெக்டர் போலீஸ் பதவிக்கு நிகரான கிரேட் 29 இல் பணியில் அசாம் பாக்கி, உத்தரவுகளுக்கோ அல்லது பாராட்டுகளுக்கோ காத்திருக்காமல் 'உங்களால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்தல்' என்ற கொள்கையைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தார்.

Ketua SPRM Tan Sri Azam Baki menegaskan beliau berkhidmat tanpa mengharapkan pengiktirafan. Dengan integriti dan dedikasi sejak 1984, beliau menekankan komitmen kepada tanggungjawab, bukan ganjaran, sambil menolak idea untuk meninggalkan legasi peribadi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *