FRU ஊழியர்கள் விபத்து லாரி உரிமையாளர் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 17: செவ்வாயன்று தெலுக் இந்தானில் ஒன்பது FRU  ஊழியர்கள் பலியான விபத்திற்குக் காரணமான  லாரியின் உரிமையாளர், கடந்த மாதம் வாகனம் புஸ்பகோம் பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

லாரியில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக அவர் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை, துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறுகையில், லாரியின் ஸ்டீயரிங் சிக்கலைக் குறிப்பிட்டாலும், வாகனம் புஸ்பகோம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் விபத்தைத் தடுத்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அந்த லாரியின் உரிமையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம்தான் புஸ்பகோமுக்குச் சென்றதாகவும், லாரி பரிசோதனையில் தேர்ச்சி பெற்றது என்றும் அவர் கூறினார்.

அதன் பிறகு, சாலை வரியை புதுப்பித்ததாகவுன் ரவி என்று அறியப்படும் அந்நபர் கூறினார்.

விபத்தில் சிக்கிய ஓட்டுநர் சுமார் ஒன்றரை மாதங்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தார் என்று ரவி மேலும் கூறினார்.

45 வயதான ஓட்டுநர் ரூடி சுல்கர்னைன் மாட் ராடி மீது நேற்று கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தால் ரவி மிகவும் வருத்தமடைந்ததாகக் கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைப் பற்றி தொடர்ந்து சிந்தித்து வருவதாகவும், முடிந்தால் அவர்களைச் சந்திப்பேன் என்றும் அவர் கூறினார்.

தாம் மனம் உடைந்து போய்விட்டதாக  அவர் கூறினார்!


Pemilik lori yang terlibat dalam kemalangan di Teluk Intan mendakwa kenderaan itu lulus pemeriksaan Puspakom bulan lalu. Pemandu baru bekerja sebulan setengah. Pemilik meluahkan kesedihan dan ingin bertemu keluarga mangsa yang terkesan.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *