சமூக வலைதளங்களில் பரவி வரும் அனகோண்டா உண்மையானதா?

- Muthu Kumar
- 13 May, 2025
உலகில் உள்ள மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள்தான்.. எனவேதான், பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த காடுகளை சுற்றியே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
இதில் பெரும்பாலும் அனகொண்டா பாம்புகளே அதிகம் சிக்குகின்றன.. பெரு, பொலிவியா, பிரேசில் , பிரெஞ்சு டயானாவில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் மட்டுமே அனகொண்டா பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது ராட்சத அளவிலான அனகோண்டா அமேசான் காடுகளில் இருப்பதாக சொல்கிறார்கள்.
சமீபத்தில்கூட, நார்த்தன் கிரீன் அனகொண்டா வகையை சேர்ந்த பாம்பு ஒன்று கண்டறியப்பட்டது.. அதாவது, நேஷனல் ஜியாகிரபிக் (National Geographic) சேனல், அமேசான் காட்டில் நடத்திய ஷூட்டிங்கின்போது, உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு அமேசானில் உள்ள ஒரு ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்திலும் பதிவிடப்பட்டது..
26 அடிக்கு மேல் நீளமுள்ள அந்த பாம்பின் எடை சுமார் 500 கிலோவுக்கு இருக்குமாம்.. இந்த அளவு பிரம்மாண்ட வகை பாம்பை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றும் இது மிகவும் அரிதான பாம்பு என்றும் விலங்கியல் நிபுணர்கள் மலைத்துப்போய் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இன்னொரு அனகொண்டா கண்டறியப்பட்டுள்ளது.அமேசான் மழைக்காடுகளின் ஆழத்தில், இந்த ராட்சத அனகொண்டா தென்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பார்க்கும்போது, காட்டிலுள்ள ஒரு கால்வாய் வழியாக அந்த பாம்பு நீந்தி சென்றிருக்கிறது.. இதையும் வீடியோவாக எடுத்துள்ளனர்.டாக்டர் ஷீத்தல் யாதவ் என்பவர் தன்னுடைய ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், பெரிய கருப்பு அனகொண்டா தண்ணீரில் நகர்ந்து செல்வதை காண முடிகிறது.. உயரமான இடத்திலிருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டாலும், பாம்பு நம்பமுடியாத அளவிற்கு பெரிதாக இருக்கிறது.. இதுவரை இந்த வீடியோவை யாருமே அங்கீகரிக்கவில்லை.இதன் நம்பகத்தன்மையும் தெரியவில்லை.
ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும்போதே இவ்வளவு பெரிதென்றால், அதன் நிஜமான உருவம் எவ்வளவு பெரியதாக இருக்கும்? என்று இணையவாசிகள் அதிர்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.எனினும், இந்த அனகொண்டா நீளம், எடை அகலம் உறுதியாக தெரியவில்லை. நிஜமாகவே இது அனகொண்டா தானா? அல்லது AI மூலம் உருவாக்கப்பட்ட பாம்பா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *