ஓய்வுக்கு தயார் ஆகிறாரா சீன அதிபர்?

- Muthu Kumar
- 07 Jul, 2025
13 ஆண்டுகளாக சீன அதிபராக உள்ள ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தனது அதிகாரங்களை பிரித்து கொடுக்க தொடங்கியுள்ளார்.இதனால் அவர் ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த ஜூன்.30ம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களுக்கான(பொலீட் பீரோ) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஜி ஜின்பிங் தலைமையேற்றார். இதில் கட்சியின் நிறுவனங்களின் பணி குறித்த புதிய விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சியின் ஸ்தாபனம், பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை அவர் முன் வைத்திருக்கிறார்.
24 பேர் கொண்ட பொலீட் பீரோ உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம், அதிகார பரவல், அல்லது அதிகாரம் பகிர்ந்தளிப்பதற்கான தொடக்கம் என்று சொல்லப்படுகிறது. சீனாவின் மாவோவுக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட தலைவராக அறியப்படும் ஜி ஜின்பிங், அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகர்வதாகவும், எனவே அதிகாரத்தை பரவலாக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவுக்கும்-அமெரிக்காவுக்கும் பஞ்சாயத்து போய்க்கொண்டு இருக்கையில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் முக்கிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. மேற்கு ஊடகங்கள், ஜி ஜின்பிங் ஓய்வு பெறுவதற்கான செயல்முறையாக இந்த நிகழ்வை அடையாளப்பட்டு வருகின்றன. ஆனால் ஓய்வு குறித்து இன்றும் சீன அதிபர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சீனா இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. ஆசியாவில் உள்ள நாடுகளில் மிகவும் பலமான மற்றும் புத்திசாலித்தனமான நாடாக சீனா இருக்கிறது. குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு இணையாக ஆசியாவை மேம்படுத்தும் வேலையில் சீனா தீவிரமாக இருக்கிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் இந்த வேலையை சீனா செய்கிறது. சீனாவுடன் வர்த்தக உறவில் இருக்கும் மற்ற நாடுகளும் வளர்ந்து வருகிறது.
அதேபோல டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொடுவருவதிலும், அமெரிக்காவின் தலையீடுகளை நிறுத்துவதிலும் சீனா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா தவிர, ஏறத்தாழ அனைத்து நாடுகளும் சீனாவுக்கு பின்னால் இருக்கிறது. அனைத்து நாடுகளுடன் பொருளாதார உறவை கொண்டிருக்கும் சீனா, பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறது. இப்படியான சூழலில் ஜி ஜின்பிங் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதன் நட்பு நாடுகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளன.
ஒருவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உரசல்கள் குறைந்து நட்பு அதிகரித்தால், நிச்சயம் ஆசிய நாடுகளின் வளர்ச்சி பெரிய அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.ஆனால் இதையெல்லாம் தாண்டி சீனாவுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. தைவான் விஷயத்தில் அமெரிக்காவின் தலையீட்டை குறைப்பது, தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது, தொடர்ந்து பொருளதாரத்தில் முன்னிணியில் இருப்பது போன்ற விஷயங்கள் சீனாவுக்கு சவாலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *