பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமையா? அம்னோ இளைஞர்களிடம் சைட் இப்ராஹிம் கேள்வி!
- Shan Siva
- 14 Aug, 2024
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 : அம்னோ இளைஞர்கள் சின்னச் சின்ன விஷயங்களில் அதிக உணர்ச்சிவசப்படாமல், ஆக்கப்பூர்வமான காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோ சைட் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
பெரும்பான்மையினரின் உணர்வுகளைப் பாதுகாப்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் சட்டக் கோட்பாட்டை அம்னோ இளைஞர்கள் செயல்படுத்த விரும்புவதாகத் தமக்குத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஏபி முன்னாள் உறுப்பினர் ஹூவின் காமிக் புத்தகத்தின் மீதான தடையை திரும்பப் பெறுவதற்கான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவால் அவர்கள் வருத்தமடைந்துள்ளதாக சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 2022 இல், மேல்முறையீட்டு நீதிமன்றம் 'Belt and Road Initiative for Win-Winism' என்ற தலைப்பில் காமிக் புத்தகம் பொது ஒழுங்கிற்கு இடையூறு செய்யவில்லை என்றும் தடையை நீக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
தடையை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் முயற்சித்தது; இருப்பினும், அதே ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, காமிக்ஸ் மீதான தடையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான விண்ணப்பத்தை பெடரல் நீதிமன்றம் நிராகரித்தது.
இதைத் தொடர்ந்து, தடையை ரத்து செய்வது தொடர்பாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசித்தியோன் இஸ்மாயில் கையெழுத்திட்டதோடு இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *