லாரியின் பின் மோதிய கார்! தம்பதியர் பலி!

- Sangeetha K Loganathan
- 25 May, 2025
மே 25,
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Treler லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்திலிருந்த கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர். நேற்று காலை 9.33 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் கிடைக்க பெற்றதும் சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினருடன் விரைந்து விபத்தில் பாதிக்கப்பட்ட 69 வயது Mazalan Belia என்பவரையும் 75 வயது Radin Fuziah என்பவரையும் மீட்டு Batu Pahat Sultanah Nora Ismail அரசு மருத்துவமனையில் அனுமதித்ததாக BATU PAHAT மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் ZULMAZI ARIFIN தெரிவித்தார்.
விபத்துக்குளனளான வாகனம் PARIT RAJAவிலிருந்து PARIT RAHAMAN நோக்கி செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் இருவரும் சிகிச்கை பலனின்றி இன்று காலை 9.25 மணிக்கு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் ஓட்டுநரைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாக BATU PAHAT மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் ZULMAZI ARIFIN தெரிவித்தார்.
Pasangan suami isteri maut selepas kereta mereka melanggar belakang sebuah treler yang berhenti di tepi jalan. Kejadian berlaku di laluan Parit Raja–Parit Rahman. Mangsa disahkan meninggal dunia ketika menerima rawatan di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *