தலைநகர் தாமான் பூங்கா ராயாவில் திடீர் நிலச்சரிவு! - 17 குடும்பங்கள் வெளியேற்றம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: நேற்று பெய்த கனமழையின் காரணமாக, Taman Bunga Raya, Jalan Genting Klang,  Wardieburn Camp அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால்,  அப்பகுதியிக்ல் உள்ள 17 வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

 26 ஆண்கள் மற்றும் 26 பெண்களை உள்ளடக்கிய பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்காக புங்கா ராயா பேட்மிண்டன் ஹாலில் நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளதாக வங்சா மஜு  மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் முகமட் லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இருப்பினும், சிலர் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் தற்காலிக தங்குமிடத்தைத் தேர்வுசெய்தனர், மற்றவர்கள் ஹோட்டல்களுக்குச் சென்றதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் நடந்தது .

வீடுகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், சுமார் இரண்டடி தூரத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மண் நகர்வு குறித்த கவலைகள் காரணமாக அவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *