SUKMA நீச்சல் போட்டியில் இஸ்லாமிய பெண்களா? Terengganu அரசு கண்டனம்!
- Thina S
- 26 Aug, 2024
சுக்மா நீச்சல் போட்டியில் இஸ்லாமிய பெண்கள் இருவர் பங்கேற்றது குறித்து திரங்கானுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். திரங்கானு மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையின் ஆட்சிக் குழு உறுப்பினரான Hishamuddin Abdul Karim திரங்கானு நீச்சல் வீரர் ஓர் இஸ்லாமியர் என தனக்கு தெரியாது என்றும், திரங்கானுவைப் பிரதிநிதித்த இரு நீச்சல் வீரர்கள் மீதும் அவர்களைத் தேர்வு செய்த அதிகாரிகள் மீது திரங்கானு அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திரங்கானு நீச்சல் ஆணையமான PRAT அமைப்பின் இயக்குநர் Dato' Toh Chin Yaw மன்னிப்புக் கோரியுள்ளார். ஆனால் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தாம் தேர்வு சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்ததாகவும் அவர்களின் மத இன அடிப்படையில் இல்லை என தெரிவித்தார். தனது இச்செயலால் யாரேனும் புண்பட்டிருந்தால் தாம் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்பதாகவும் சம்மந்தப்பட்ட நீச்சல் வீரர்கள் பொறுப்பல்ல என Dato' Toh Chin Yaw விளக்கமளித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *