ஜூலையில் சுனாமி தாக்குதல்!ரியோ டாட்சுகி கணிப்பால் பயணங்களை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்!

- Muthu Kumar
- 30 Jun, 2025
ஜப்பானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியோ டாட்சுகி வெளியிட்டுள்ள ஒரு கணிப்பு தற்போது மக்கள் மத்தியில் கடுமையான பீதியை உருவாக்கியுள்ளது.ஜூலை 5, 2025 அன்று ஜப்பானில் ஒரு பெரிய பேரழிவு ஏற்படும் என அவரது புதிய நூலில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே ஜப்பானுக்கான பயண முன்பதிவுகள் பெரிதளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
'தி ஃபியூச்சர் ஐ சா' என்ற புத்தகத்தில் டாட்சுகி கூறியுள்ளதாவது, "ஜூலை 5 அன்று கடலடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். பின்னர், கடல் கொதிக்கும். பெரிய குமிழ்கள் உருவாகும். அதனால் சக்திவாய்ந்த சுனாமி எழும். இந்த அலைகளால் நகரங்கள் கடலில் மூழ்கும்" என தெரிவித்துள்ளார். இந்தக் கணிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பயத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் ஏதுமில்லை. ஜப்பானிய அதிகாரிகள் மக்களிடம் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள். மியாகி ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறியதாவது, "இது ஒரு பரபரப்பு வதந்தி மட்டுமே. எந்தவிதமான பாதுகாப்பு எச்சரிக்கையும் எமிடியலில் இருந்து எட்டவில்லை.
பயணங்களை ரத்து செய்ய தேவையில்லை" என தெரிவித்தார். ஆனால், இந்தப் பீதியின் தாக்கமாக, ஹாங்காங்கிலிருந்து ஜப்பானுக்கான விமான முன்பதிவுகள் 83 சதவிகிதம் குறைந்துள்ளன என விமான நிலைய தரவுகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன. ரியோ டாட்சுகி ஒரு வெறும் கணிப்பாளர் அல்ல என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். கடந்த காலங்களில் அவர் பல முக்கிய நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்துள்ளார்.
அதில் கடந்த 2011ஆம் ஆண்டு டோஹோகுவில் ஏற்பட்ட பூகம்பம், பிரின்சஸ் டயானாவின் மரணம், ஃப்ரெடி மெர்குரியின் மரணம், மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆகியவற்றையும் அவர் முன்னதாகவே கூறியிருந்தார். இதனால் தான் தற்போது வெளியாகியுள்ள ஜூலை 5 கணிப்பும் மக்கள் மனதில் அதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா துறையில் பாதிப்பு அதிகம். ஜப்பானின் சுற்றுலா மற்றும் வணிக துறையில் இதன் தாக்கம் தெளிவாகவே தெரிகிறது. விமான முன்பதிவுகள் குறைவதோடு, விடுதிகளில் முன்பதிவுகளும் படிப்படியாக குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், வரும் ஜூலை 5ஆம் தேதி ரியோ டாட்சுகி கூறிய கணிப்பு உண்மையா? அல்லது வெறும் பரபரப்பா? என்பது மக்கள் கவனமாகக் கண்காணிக்கும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *