நான் திருடவில்லை! RM 1 மில்லியன் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்! - Syed Saddiq!

- Sangeetha K Loganathan
- 17 Apr, 2025
ஏப்ரல் 17,
அமைச்சராக இருந்த போது அரசு பணத்தையோ, கட்சிப் பணத்தையோ நான் திருடவில்லை என்றும் அது நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்றும் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq இன்று தெரிவித்தார். அவர் மீதான 1 மில்லியன் நிதி கையாடல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் Armada Bersatu வங்கியிலிருந்து தாம் பெற்ற பணம் கட்சி நிதி இல்லை என்றும் அது என்னுடைய பணம் என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு Armada Bersatu கட்சியின் துணைப் பொருளாளதரிடமிருந்து RM 1 மில்லியன் தொகையைத் தனது சொந்த வங்கிக் கணக்குக்குப் பரிவர்த்தனை செய்ததாகக் கடந்த நவம்பர் 9 Syed Saddiq குற்றவாளி என உயர்நீதிமன்றம் RM 10 மில்லியன் அபராதமும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையையும் 2 பிரம்படிகளையும் விதித்த நிலையில் தற்போது அந்த வழக்கின் மேல்முறையீட்டில் Syed Saddiq தம்மை நிரபராதி என வாதாடினார். சம்மந்தப்பட்ட 1 மில்லியன் பணத்திற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் மேல்முறையீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிச் செய்யும்படி துணை அரசு வழக்கறிஞர் Datuk Wan Shaharuddin Wan Ladin வலியுறுத்தினார்.
Syed Saddiq menegaskan bahawa wang RM1 juta yang diterimanya bukan wang parti atau kerajaan, tetapi hasil titik peluhnya. Beliau merayu keputusan mahkamah yang mensabitkannya atas kesalahan pecah amanah dan pengubahan wang haram.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *