SYED SADDIQ'க்கு நிபந்தனையுடன் தற்காலிக PASSPORT! - நீதிமன்றம் ஒப்புதல்!
.jpg)
- Thina S
- 14 Aug, 2024
MUAR நாடாளுமன்ற உறுப்பினர் Syed
Saddiq பாஸ்போர்டைத் தற்காலிகமாக வழங்க இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம்
ஒப்புதல் அளித்தது, பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும் அதன் கட்டுப்பாடுகளை
அறிந்து செயல்பட வேண்டும் என Syed Saddiq க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, Asean
Halal Pavilion மாநாட்டில் பங்கேற்க Syed Saddiq தாய்லாந்துக்குப் பயணிப்பதற்காகக் பணமோசடி வழக்கை எதிர்நோக்கிய காரணத்தால்
தனது பாஸ்போர்ட்டை முடக்கிய நீதிமன்றம் குறிப்பிட்ட தாய்லாந்துக்கு மட்டும் பயணிக்க
நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கடந்த வெள்ளிக் கிழமை மனு தாக்கல் செய்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
Syed Saddiq இளைஞர் விளையாட்டு அமைச்சராக 2018 முதல் 2020 வரையிலி பதவியில் இருந்த போது
Armada வைப்பு நிதியின் 1 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாகவும், Armada Bumi Bersatu Enterprise நிறுவனத்திற்குச் சொந்தமான
120,000 ரிங்கிட் முறைகேடு செய்ததாகவும், Amanah Saham Bumiputera எனும் அமைப்பிற்குத் தன் சொந்த
வங்கியிலிருந்து 50,000 ரிங்கிட் கணக்கில் இல்லாத பணம் பரிவர்த்தனை
செய்தது என மூன்று பண மோசடி வழக்குகளை அவர் எதிர்நோக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *