பக்ரீத் பண்டிகை அமைதியுடன் கொண்டாடப்பட்டதாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பக்ரீத் பண்டிகை மீண்டும் அமைதியுடன் முடிந்ததாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று, சாலைகளில் தொழுகை இல்லை, தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்படவில்லை எனக் கூறியுள்ளார். 

நாடு முழுவதிலும் முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை, சமீபத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்காக முஸ்லிம்கள் நிரம்பி வழிவது வழக்கம். இதன் காரணமாக அவர்கள் பலசமயம் மசூதிக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தும் நிலை ஏற்படுவது உண்டு. தமிழ்நாட்டில் இதுபோன்ற விஷேச நாட்களில் சாலைகளை மறித்து தொழுகை நடத்தப்படும். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப் படுவதுடன் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தும். இதனால், தமிழ்நாடு அரசு மைதானங்கள் மற்றும் கடற்கரை பகுதியில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், 2014-ல் மத்தியில் பாஜக தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் வட மாநிலங்களில், சாலைகளில் தொழுகை நடத்துவது தடை செய்யப்பட்டன. சாலை ஓரங்களில் எந்த காரணம் கொண்டும் தொழுகை நடத்தக் கூடாது எனகண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மேலும் பசு போன்ற தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. 

இதனால் உத்திர பிரதேச மாநிலத்தில்  முஸ்லிம்கள் தங்கள் பகுதியில் உள்ள பெரிய குடியிருப்புகளிலும், மைதானங்களிலும் அரசின் அனுமதி பெற்று தொழுகைகள் நடத்தினர். 

இந்த நிலையில், தமது அரசின் உத்தரவு தற்போது முடிந்த பக்ரீத் பண்டிகையிலும் முறையாக கடைபிடிக்கப்பட்டதாக அதன் முதல்வர் யோகி மீண்டும் பெரு மிதம் கொண்டுள்ளார். இதுதொடர்பாக உத்திர பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஈத்-உல்-அஸா எனும் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதில் உ.பி. இந்தநாட்டுக்கே மீண்டும் முன்னுதாரணமாகி உள்ளது. 

இந்த வருடமும் பக்ரீத் சிறப்பு தொழுகை சாலைகளில் நடத்தப்படவில்லை. இதனால், எவ்வித போக்குவரத்து தடையும் ஏற்படவில்லை. தடை செய்யப்பட்ட விலங்குகள் பலியிடப்படவில்லை. இதன் மீதான எனது வேண்டுகோளுக்கு முஸ்லிம் நண்பர்கள் ஆதரவளித்தனர். 

இதன் பலன், பக்ரீத் தொழுகை அதற்கான மசூதிகளிலும், ஈத்கா மைதானங்களிலும், பாரம்பரிய இடங்களிலும் நடைபெற்றன. மசூதி, ஈத்காக்களில் இருந்த இட பற்றாக் குறையை சமாளிக்க ஷிப்ட் முறையில் தொழுகைகள் நடத்தி சமாளிக்கப்பட்டன. இதுபோன்ற நாட்களில் இதற்குமுன் தேவையற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. 

அதேசமயம் பலமானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதிலும் செய்யப்பட்டிருந்தன. பதற்றமான பகுதிகளில் டிரோன்கண்காணிப்புகள், பொதுமக்களின் நம்பிக்கையை பெற அதிகபோலீஸ் படைகள் அமர்த்தியதுடன் அவர்களது அணிவகுப்புகள் ஒருநாள் முன்னதாக நடத்தப்பட்டன' என கூறப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *