போஸ்ட் மலேசியாவில் AI நுட்பம்! - ஊழியர்களைப் பாதிக்காது!
- Shan Siva
- 09 Oct, 2024
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் மலேசிய அஞ்சல் துறையில் அதிகரித்தாலும் அங்கு
மனிதவளத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
18,000 ஊழியர்கள் பணிபுரிந்து வரும்
மலேசிய அஞ்சல் துறையான போஸ்ட் மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்டாலும், அங்குள்ள ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் குறித்த அச்சம் வேண்டாம்
என 2024-ஆம்
ஆண்டுக்கான உலக அஞ்சல் தின வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நிகழ்வில், செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் தொடர்பாக எழும்
சிக்கல்களைத் தீர்க்க போஸ்ட் மலேசியா AI நுட்பத்தைப் பயன்படுத்துமே தவிர, தபால்காரர்களின்
வேலையைச் அதன் வழி செய்ய முடியாது ஃப்ஃஃமி
சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *