தடைகளைத் தகர்த்து நிமிரும் தமிழ் மலர் நாளிதழ் - YB Teo Nie Ching புகழாரம்!

top-news
FREE WEBSITE AD

இன்று தமிழ் மலர் நாளிதழ் அலுவலகத்திற்கு தொடர்பு அமைச்சின் துணை அமைச்சர் Teo Nie Ching அதிகாரப்பூர்வ வருகையளித்தார். அவருடன் துணை அமைச்சர் குலசேகரன், துணை அமைச்சர் க.சரஸ்வதி, பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன், பூந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ம.துளசி, கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் PREAKAS, தொடர்பு அமைச்சின் இணைச் செயலாளர் NIK KAMARUZAMAN ஆகியோரைத் தமிழ் மலர் நிறுவனத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் வரவேற்றார்.

தமிழ் மலர் கடந்து வந்த சுவடுகளையும் அதன் செயல்திறன் தொடர்பாகத் தமிழ் மலர் நிருபர் LAVANYAA RAVICHANDRAN விளக்கமளித்தார்.

மலேசிய ஊடகங்களின் வரிசையில் தமிழ் மலர் நாளிதழும் முக்கியத்துவம் வாய்ந்தது என துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார், கடந்த ஆண்டுகளின் தமிழ் மலர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வருந்ததக்கது என்றும் அது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தொடர்பு அமைச்சு அரணாக இருந்து ஊடகங்களைக் காக்கும் என்றும், பல்வேறு தடைகளைக் கடந்து தமிழ் மலர் நாளிதழ் நிலைபெற்று நிற்பது போற்றுதலுக்குரியது என Teo Nie Ching தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *