சமயப் பணிகள் மோலோங்க வேண்டும்! - துணை அமைச்சர் K.SARASWATHY வலியுறுத்து!
- Thina S
- 25 Aug, 2024
சமயப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மலேசிய இந்து சங்கம் மிகவும் பாராட்டத்தக்கது என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். 46 ஆண்டுகளாக இந்து சங்கம் சமயப் பணிகளை மேற்கொண்டு வருவதை தாம் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
இன்று மலேசிய இந்து சங்கப் பினாங்கு பேரவையின் 46 ஆவது திருமுறை ஓதும் விழாவை தொடக்கி வைத்து உரையாற்றினார்.
ஆண்டுதோறும் வட்டார, மாநில மற்றும் தேசிய ரீதியில் 25,000 மாணவர்கள் இந்த திருமுறை ஓதும் போட்டியில் பங்கு பெற்று வருவது பெருமைக்குரியது என அவர் தெரிவித்தார்.
திருமுறையை ஓதி மட்டும் போதித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இந்து சங்கத்தின் பணிகளுக்கு நமது இந்திய சமூகம் துணை நிற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
12 திருமுறைகள் சம்பந்த மூர்த்தி, திருநாவுக்கரசு, சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார் போன்ற 10 பேர் இல்லாமல் தோன்றியிருக்காது. இந்த 12 திருமுறைகளுக்குக் காரணக் கர்த்தாவாக இருந்தவர் நம்பியாண்டார் நம்பி. இதற்கு பின்புலனமாக இருந்தது சோழ பேரரசர். மலேசிய மண்ணில் இந்த 12 திருமுறைகளை ஓதி போதித்து வரும் இந்து சங்கத்திற்கு நாம் கை கொடுக்க வேண்டும். இந்து சங்கம் ஆண்டுதோறும் நடத்தி வரும் திருமுறை ஓதும் போட்டியில் தமிழ் பள்ளி மாணவர்கள் தான் அதிகமாக பங்கு பெற்று வருகின்றனர்.
இந்த மண்ணில் தமிழ் மட்டும் இந்து சமயத்தை காப்பாற்றிக் கொண்டிருப்பது தமிழ் பள்ளிகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
நாட்டில் 529 தமிழ் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 300 பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளதற்கான காரணம், அப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.
ஆகையால் தமிழ் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்து சங்கம் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திருமுறை ஓதும் விழாவிற்கு அரசாங்கத்திடம் மானியத்தைப் பெற தாம் வழிவகுப்பதாக செனட்டர் சரஸ்வதி நம்பிக்கை அளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *