போதைப்பொருளுடன் தப்பிக்க முயன்ற ஓர் இளைஞரும் 2 இளம்பெண்களும் கைது!

- Sangeetha K Loganathan
- 26 May, 2025
மே 26,
ரோந்து பணியிலிருந்த காவல் அதிகாரிகளிடம் தப்பிக்க முயன்ற வாகனத்தைக் காவல் துறையினர் சுற்றி வலைத்து பிடித்ததில் வாகனத்திலிருந்து SYABU வகை போதைப்பொருளுடன் உள்ளூர் ஆடவர் ஒருவரும் 2 இளம் பெண்களும் கைது செய்யப்பட்டதாகச் சிரம்பான் மாவட்டக காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார், அதிகாலை 1.20 மணிக்குச் சிரம்பான் ஜாலான் தம்பின் சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியிலிருந்த போது HONDA HRV வாகனம் நிறுத்தாமல் சென்றதால் சம்மந்தப்பட்ட வாகனத்தைக் காவல்துறையினர் சிரம்பானிலிருந்து ஜாலான் காஜாங் வரை துரத்தினர்.
துரத்தலின் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் குடியிருப்புப் பகுதியில் இருந்த மற்றொரு வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்திலிருந்த 28 முதல் 30 வயதுக்குற்பட்ட ஓர் இளைஞரும் 2 இளம்பெண்களும் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞரின் மீது 23 முந்தைய குற்றச் சம்பவங்கள் நிலுவையில் இருப்பதையும் தேடப்படும் குற்றவாளியான அந்த இளைஞரையும் உடன் இருந்த மேலும் 2 இளம்பெண்களையும் விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சிரம்பான் மாவட்டக காவல் ஆணையர் Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
Seorang lelaki dan dua wanita berusia lingkungan 28 hingga 30 tahun ditahan polis di Seremban selepas melarikan diri bersama syabu dalam kenderaan. Polis mengejar mereka sehingga kenderaan terbabit terbabas. Suspek lelaki dikehendaki dan ada 23 rekod jenayah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *