போலி மருந்துகளுடன் போதைப்பொருளைக் கடத்திய மூவர் கைது!

- Sangeetha K Loganathan
- 25 May, 2025
மே 25,
அங்கீகரிக்கப்படாத சுகாதார மருந்துகளையும் போதைப்பொருளையும் பதுக்கி வைத்திருந்த 3 உள்ளூர் ஆடவர்களைத் தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் கைது செய்தது. நேற்று Bandar Sri Perdanaவில் உள்ள சந்தேகத்திற்குரிய Ninja Van பொது தபால் நிலையத்தில் 66 வயது உள்ளூர் ஆடவரும் Jalan Silam பகுதியில் உள்ள கிடங்கில் 36 வயது 55 வயது உள்ளூர் ஆடவர்கள் இருவரையும் கைது செய்தததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத போலி மருந்துகளை Ninja Van மூலமாகக் கடத்த முயற்சிக்கும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Lahad Datu சுகாதார மையம் உறுதிப்படுத்தியது.
இரண்டு வெவ்வேறு சோதனைகளில் 60 பாட்டில் Stem zcell Activin திரவ மருந்துகளும் 20 பாட்டில் Cell Essence Energy Peptide பாட்டில்களும் 120 Red Cialis Essence மருந்துகளும் 120 போலி நெகிழி மருந்துகளும் 115 கிராம் SYABU வகை பேதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் மதிப்பு சுமார் RM 139,000 என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைக்காக LAHAD DATU காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tiga lelaki tempatan ditahan kerana menyimpan dan cuba menyeludup dadah serta ubat tidak sah melalui Ninja Van. Pelbagai produk termasuk Syabu dan ubat palsu bernilai RM139,000 dirampas. Kes disiasat oleh pihak berkuasa di Lahad Datu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *