நடைபாதைகளை ஆக்கிரமித்த வணிகக் கடைகள் வாகனங்கள் மீது DBKL நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 01 May, 2025
மே 1,
தலைநகரின் முக்கிய பகுதிகளில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து வணிகம் செய்தவர்களையும் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் சம்மன் வழங்கியதுடன் 9 வாகனங்களையும் பறிமுதல் செய்தது. கோலாலம்பூரில் Jalan Kepong, Jalan Dang Wangi ஆகிய சாலைகளில் வாகன நெரிசல்கள் ஏற்படுவதால் சாலைகளை விரிவாக்கம் செய்யப்பட்டது, அதன்பின்னரும் வாகன நெரிசல் ஏற்படுவதால் இம்மாதிரியான நடவடிக்கை மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம்.
சாலைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்த வணிகக் கடைகளின் வணிக உரிமத்தை ரத்து செய்ததுடன் 21 வணிகக் கடைகளுக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அபராதத்தைச் செலுத்தும் வரையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் திரும்ப வழங்கப்படாது என கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் தெரிவித்தது. சாலையோரத்தில் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 வாகனங்களையும் கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் பறிமுதல் செய்துள்ளது.
DBKL mengambil tindakan terhadap peniaga dan pemilik kenderaan yang menghalang laluan pejalan kaki di Jalan Kepong dan Jalan Dang Wangi. Sebanyak 21 saman dikeluarkan, lesen perniagaan dibatalkan, dan 9 kenderaan serta barang perniagaan telah disita.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *