நமது வேலை அது இல்லை-நமக்கு நிறைய வேலை இருக்கு திருமாவளவன் செயல் பற்றி மு க ஸ்டாலின்!

top-news
FREE WEBSITE AD

மகாத்மா காந்தி பிறந்த நாளில் கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை திருமாவளவன் அழைத்திருப் பதுதான் தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

மோடியே நினைத்தாலும் கூட்டணியை உடைத்து விட முடியாது அந்தளவுக்கு விட்டுக் கொடுத்து கூட்டணியை கெட்டியாக வைத்திருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சமயோஜித அரசியல். அதனால், திமுக கூட்டணி பலத்துக்கு முன்னால் அதிமுக, பாஜக போடும் அரசியல் கணக்குகள் தப்பாகிக் கொண்டே இருக்கின்றன.

அதனால்தான், கூட்டணியில் இருந்து கொண்டே திமுக அரசின் நிலைப்பாடுகளுக்கு எதிராக விமர்சனம் வைப்பதும், தற்போது அக்கட்சி நடத்தும் மது ஒழுப்பு மாநாட்டுக்கு திமுகவின் நேரடி எதிரியான அதிமுகவை அழைப்பதுமான திருமாவின் சமீபகால போக்கு, அதிமுக மற்றும் பாஜகவை நிமிர்ந்து உட்கார வைத்துள்ளது.

அதிலும் திருமா கொடுத்த 2 ஸ்டேட்மென்ட் திமுகவை கோபப்படுத்தி உள்ளதாம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அந்த கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் அழைப்பு விடுத்துள்ளார்.  எந்த கட்சியாக இருந்தாலும் வரலாம் என்று திருமா நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

அதோடு இல்லாமல் தமிழ்நாட்டில் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இலவசங்களை கொண்டு வருவதற்கு பதிலாக.மது ஒழிப்பு திட்டங்களை கொண்டு வரலாம். மது ஒழிப்பு.மது விலக்கு கொண்டு வந்தால் போதும். அந்த நிதி இலவசங்களை கொடுக்க வேண்டியது இல்லை என்றார்.

அதாவது திருமாவளவன் திமுக கூட்டணியோடு முரண்பட்டால் திருமா வெளியேறுவார். திருமாவை தொடர்ந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறும். திமுக கூட்டணி கலகலத்துப் போகும் என்று கணக்கிட்டுத்தான் அதிமுகவும், பாஜகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றன.

திருமாவின் இத்தகைய போக்கினை திமுக தலைமை ரசிக்கவில்லை.திருமா போகட்டும் என்கிற மனநிலையில்தான் திமுக தலைமை இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, திருமாவின் மது ஒழிப்பு மாநாடு, அதிமுகவுக்கு அழைப்பு என்கிற விபரங்கள் அமெரிக்காவில் உள்ள ஸ்டாலினுக்கு தெரியப் படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு ஸ்டாலின், 'அவர்கள் நடத்தும் மாநாட்டுக்கு அவர்கள் யாரை வேண்டுமானாலும் அழைக்க உரிமை இருக்கிறது. அழைத்துக் கொள்ளட்டும். இதை நாம் தடுக்க முடியாது.நமது வேலையும் அது இல்லை. நமக்கு நிறைய வேலை இருக்கு என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லப்பட்டதாக தகவல்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *