விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ்க்கு கண் அசௌகரியம் இருப்பதாக தகவல்!

top-news
FREE WEBSITE AD

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் சிக்கி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதது.தற்பொழுது அவருக்கு கண் அசௌகரியம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட  காலமாக  ஜீரோ கிராவிட்டியில் வாழ்ந்ததால் அவருக்கு இந்த பிரச்சனை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுனிதா வில்லியம்ஸுக்கு Spaceflight Associated Neuro-Ocular Syndrome (SANS) என்ற பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயில், கண்களுக்கு தேவையான சத்துக்கள் அவர்களை சென்றடையாது. இது பார்வையை மங்கலாக்கி கண்ணின் வடிவத்தை மாற்றுகிறது.இந்நிலையில் அவருக்கு விழித்திரை, கார்னியா மற்றும் லென்ஸ் ஸ்கேன் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுனிதா வில்லியம்ஸைத் தவிர, விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். இருவரும் ஜூன் 6-ஆம் தேதி விண்வெளி நிலையத்தை அடைந்தனர்.

வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அமெரிக்க விமான நிறுவனமான போயிங் மற்றும் நாசாவின் கூட்டு குழு விமான சோதனை பணியில் சென்றனர்.இது 8 நாட்கள் கொண்ட பணியாகும். அதன்படி, அவர் ஜூன் 13 அன்று திரும்ப வேண்டியிருந்தது, ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவரால் திரும்ப முடியவில்லை.

இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2 மாதங்கள் தங்கியுள்ளனர். இருவரையும் திரும்பப் பெறுவதற்கான வழிகளை நாசா தொடர்ந்து தேடி வருகிறது.சமீபத்தில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இருவரும் திரும்ப பிப்ரவரி 2025 வரை ஆகலாம் என்று கூறியது.

விண்கலம் ஏவப்பட்ட 25 நாட்களில் அதன் காப்ஸ்யூல்களில் 5 ஹீலியம் கசிவு ஏற்பட்டதாக பிரித்தானிய செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 5 த்ரஸ்டர்கள் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. மேலும், ஒரு உந்துவிசை வால்வை முழுமையாக மூட முடியவில்லை.

விண்வெளியில் உள்ள குழுவினராலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள மிஷனின் மேலாளராலும் அதை சரிசெய்ய முடியவில்லை.




ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *