நான் அப்போவே சொன்னேன் கெஜ்ரிவால் கட்சி படுதோல்வி பற்றி அண்ணா ஹசாரே!

top-news
FREE WEBSITE AD

இந்தியாவில் நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி ஆம் ஆத்மி வசம் இருந்த நிலையில், அங்கு இப்போது பாஜக ஆட்சியை அமைக்கிறது.இதற்கிடையே இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த முறை டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை பெற்று வந்தது. இதன் மூலம் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் பாஜக ஆட்சியை அமைத்துள்ளது. இதற்கிடையே கெஜ்ரிவால் தோல்வி தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தூய்மையான நபராகவும் எந்தவொரு குற்றச்சாட்டுகளும் இல்லாது இருக்க வேண்டும் என அண்ணா ஹசாரே கூறினார். கெஜ்ரிவாலிடம் இதைப் படித்துப் படித்து சொன்ன போதும் அதைக் காதில் கூட வாங்கவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்..

மதுபான ஊழல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய அண்ணா ஹசாரே, பணம் மற்றும் அதிகாரத்தால் கெஜ்ரிவால் திசை மாறிவிட்டதாகவும் விமர்சித்தார்.. மதுபான ஊழல் விவகாரத்தில் கெஜ்ரிவாலின் இமேஜ் சிதைந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு ஊழல்தான் காரணம் என்றும் சாடினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா ஹசாரே, "தேர்தலில் போட்டியிடும் போது, ​ஒரு ​வேட்பாளருக்கு நல்ல குணாதிசயமும், இமேஜும் இருக்க வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாகக் கூறி வருகிறேன். ஆனால், ஆம் ஆத்மிக்கு அது கிடைக்கவில்லை. மதுபான பணத்தில் சிக்கிக் கொண்டார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் இமேஜ் காலியாகிவிட்டது. இதுவே அவர்களின் தோல்விக்குக் காரணம்.

கெஜ்ரிவாலை மக்கள் பார்க்கிறார்கள் ஊழல் இருக்கக்கூடாது நல்ல கேரக்டர் இருக்க வேண்டும் என கெஜ்ரிவால் பேசுகிறார். ஆனால், அவரே மது கொள்கை விவகாரத்தில் ஊழல் எனக் கைதாகிறார். அரசியலில் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரே தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். உண்மையை எப்போதும் மறைக்க முடியாது.

கட்சி அமைப்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்த போதே நான் கட்சியில் இருக்கப் போவதில்லை என்று முடிவெடுத்து இருந்தேன். அப்போது முதல் அதே கொள்கையில் பயணித்து வருகிறேன்" என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *