அபாயகரமாக லாரியைச் செலுத்திய ஓட்டுநர் கைது!

- Sangeetha K Loganathan
- 29 Apr, 2025
ஏப்ரல் 29,
போக்குவரத்து விதிகளை மீறி எதிரில் வரும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் லாரியைச் செலுத்திய ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தென்கிள்ளான் SKVE விரைவுச் சாலையில் மற்றொரு லாரியை முந்துவதற்காக எதிர் பாதையில் லாரி வரும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட 30 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
எதிரே வந்த லாரி தம்மை மோத வருவதாக அலரறியபடி காணொலியைப் பதிவு செய்த உள்ளூர் இளம் பெண் பாதுகாப்பாக இருப்பதாகவும் அபயாகரமாகச் செலுத்தப்பட்ட லாரியால் எந்தவொரு விபத்தும் ஏற்படவில்லை என்றும் Mohd Akmalrizal Radzi உறுதிப்படுதினார். இச்சம்பவம் ஏப்ரல் 23 நண்பகல் 2 மணிக்கு SKVE விரைவுச் சாலையில் நிகழ்ந்ததாகவும் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
Polis mengambil keterangan pemandu treler yang memandu secara melulu dan memasuki laluan bertentangan di jambatan SKVE, menyebabkan kenderaan lain terpaksa mengelak. Tiada kecederaan dilaporkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *