தேசிய சட்டத்துறைத் தலைவர்-அரசு தரப்பு வழக்கறிஞர் அதிகாரம் பிரிப்பது தொடர்பான ஆய்வு தொடர்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 23-

தேசிய சட்டத்துறைத் தலைவருக்கும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையிலான அதிகாரங்களை பிரிப்பது தொடர்பான ஆய்வு, இன்னும் செயற்குழுக்கள். அரசாங்க கொள்கைப் பிரிவுகளை உட்படுத்திய விவாத நிலையிலேயே உள்ளது.

அனுபவ ஆய்வுகள் முடிந்த பின்னர், அதிகாரப் பிரிவைச் செயல்படுத்துவதற்கு, மாநில அளவில் சட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான ஆய்வு தேவைப்படுவதாக சட்டம், கழக சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

"இல்லை. இல்லை. அவர் அனுபவ ஆய்வுகளை முடித்துவிட்டார். நாம் அதைப் பல குழுக்களுக்குக் கொண்டு வர வேண்டும். அவை முடிவு செய்யப்பட்ட பின்னர், நாங்கள் அதை அடிப்படைகளுக்கு எடுத்து செல்கிறோம். ஆனால், இந்த விவகாரம் நேரடியானது அல்ல. ஏனென்றால், நாம் இப்போது இன்னும் பல கட்டங்களில் ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர்.

வழக்கு தொடுப்பது மற்றும் அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவது போன்ற பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தேசிய சட்டத்துறையின் நோக்கங்களில் ஆலோசனை கூறு. முக்கிய பரிசீலனைகளில் ஒன்றாக இருப்பதாகவும் அசாலினா குறிப்பிட்டார்.
தொழில்நுட்பக் குழு, நாடாளுமன்றத் தேர்வு செயற்குழு மூலம் செயல்பாடுகளைப் பிரிப்பது தொடர்பான தொழில்நுட்ப விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நேற்று, கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு சட்ட நீதி தொடர்பான செயல்திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அசாலினா அதனைக் கூறினார்.

Kajian mengenai pemisahan kuasa antara Peguam Negara dan Peguam Cara Kerajaan masih dalam peringkat perbincangan dan siasatan. Menteri Azalina Othman Said menegaskan proses ini memerlukan kajian terperinci sebelum pelaksanaan di peringkat negeri dan persekutuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *