சுங்கை பெட்டானியில் காற்று மாசு! 2 தொழில்சாலைகள் மூடப்பட்டது!
- Sangeetha K Loganathan
- 11 Oct, 2024
கெடா சுங்கை பெட்டானியில் Bukit Banyan , Bukit Selambau எனும் இரு பகுதிகளில் காற்று மாசுப்பட்டுள்ளதாகக் கெடா மாநில இயற்கை மேலாண்மை தெரிவித்துள்ளது. சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள இரு தொழில்சாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட புகையில் ரசாயன வாயு கலந்திருப்பதால் சம்மந்தப்பட்ட பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகக் கெடா மாநில இயற்கை மேலாண்மையின் தலைமை இயக்குநர் Sharifah Zakiah Syed Sahab தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட இரு தொழில்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என கெடா மாநில இயற்கை மேலாண்மை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. தொழில்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் காற்று, சுத்தகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை Sharifah Zakiah வலியுறுத்தினார்.சம்மந்தப்பட்ட தொழில்சாலையில் காற்று சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்தது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்ததால் சம்மந்த்தப்பட்ட தொழில்சாலைகள் மூடப்படவுள்ளதாகக் கெடா மாநில இயற்கை மேலாண்மையின் தலைமை இயக்குநர் Sharifah Zakiah Syed Sahab விளக்கமளித்தார்.
JAS Kedah mengeluarkan notis kepada dua premis di Sungai Petani akibat pencemaran bau berulang. Premis arang dan kitar semula diarahkan memperbaiki kawalan pencemaran udara. Aduan awam disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *