பட்ஜெட் 2025 - வாழ்க்கைச் செலவீனத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்தும்! - பிரதமர்
- Shan Siva
- 06 Aug, 2024
புத்ராஜெயா, ஆகஸ்ட் 6: மலேசியர்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதில் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார்.
நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், அமைச்சகத்தின் கொள்கையைத் திட்டமிடுபவர்களிடம் தீர்வுகளை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
சர்க்கரை, எண்ணெய், மாவு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலைவாசி குறித்து மலேசியர்கள் இன்னும் சுமையாக இருப்பதாக அன்வர் கூறினார்.
அதனால்தான், இந்த பட்ஜெட்டில், தாங்கள் ஏற்கனவே விவாதித்து வரும் பிரச்சினைகள் தவிர, விலைவாசி உயர்வுக்கான காரணங்கள்... உரம், விதைகள் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று திட்டமிடுகிறோம் என அன்வார் தெரிவித்தார்.
இதன் பொருள், நிதி அமைச்சகம், குறிப்பாக கொள்கை திட்டமிடுபவர்கள், அமைச்சகங்கள் முழுவதும் தீர்வுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும், என்று அவர் இங்கு அமைச்சகத்தின் ஊழியர்களுடன் மாதாந்திர கூட்டத்தில் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *