சரவாக் பள்ளிகளில் ஆண்டு 6 மாணவர்களுக்குத் தேர்வு!

- Sangeetha K Loganathan
- 26 May, 2025
மே 26,
சரவாக்கில் பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இருமொழித் திட்ட மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் என சரவாக் மாநிலக் கல்வித் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri Roland Sagah Wee Inn இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆரம்பப் பள்ளியில் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 15,16 இந்த UPDLP Sarawak எனும் இருமொழித் திட்ட மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்,
முக்கிய பாடங்களான அறிவியல், கணிதம், ஆங்கிலம் என 3 பாடங்களை உள்ளடக்கிய இந்த இருமொழித் திட்ட மதிப்பீட்டுத் தேர்வு எனும் UPDLP Sarawak தேர்வில் உள்ளூர் நிபுணத்துவ ஆசிரியர்களின் வழிகாட்டலில் இந்த தேர்வுத் தாள்கள் அமைக்கபடும் என்றும் இந்த UPDLP Sarawak தேர்வு அனைத்துலக Cambridge பல்கலைக்கழகத்தால் மதிப்பீடு செய்யப்படும் என்றும் சரவாக் மாநிலக் கல்வித் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri Roland Sagah Wee Inn தெரிவித்தார். கல்வி அமைச்சின் சட்டக் கூறுகளை மீறாதவாரு இந்த தேர்வு ஆண்டு 6 மாணவர்களுக்காக நடத்தப்படும் என சரவாக் மாநிலக் கல்வித் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Seri Roland Sagah Wee Inn உறுதியளித்தார்.
Sarawak akan melaksanakan ujian penilaian dwibahasa (UPDLP Sarawak) bagi murid Tahun 6 pada 15 dan 16 Oktober. Ujian melibatkan subjek Sains, Matematik dan Bahasa Inggeris serta dinilai oleh Universiti Cambridge tanpa melanggar dasar Kementerian Pendidikan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *