ருக்கூன் நெகாரா சுவரோவியப் போட்டி... வெற்றிபெற்றவர்களுக்குத் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பரிசுகள் வழங்கினார்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா,  ஆகஸ்ட் 202024 கூட்டரசுப் பிரதேச அளவிலான ருக்கூன் நெகாரா சுவரொவியம் வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி பரிசுகள் வழங்கினார்.

ருக்கூன் நெகாரா கோட்பாடுகள் மனதில் பதிய வைக்கவும் நாட்டின் மீது விசுவாசத்தை வலுப்பெறச் செய்யவும் இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தமது உரையில் கூறினார்.

சமூக ஒற்றுமைக்கு ஒரு பாலமாக இருந்து வரும் மலேசிய தேசிய காப்பகம் இதுபோன்ற போட்டிகளை நடத்தி வருவது பாராட்டக்க்குரியது என்று அவர் தெரிவித்தார்.

புத்ரா ஜெயா கூட்டரசு பிரதேசம், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தப் போட்டியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளது பெருமைக்குரிய ஒன்று என அவர் தெரிவித்தார்.

மாணவர்களிடையே விசுவாச உணர்வை வலுப்பெறச் செய்ய இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.

ஒற்றுமையின் அடித்தளமான ருக்கூன் நெகாராவைக் கடந்த 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி, அப்போதைய பேரரசர் துவாங்கு இஸ்மாயில் நசிருடின் ஷா தொடக்கி வைத்தார்.

காலஞ்சென்ற பிரதமர் துன் அப்துல் ரசாக் தலைமையிலான தேசிய ஆலோசனை மன்றம் ருக்கூன் நெகாரா கோட்பாடுகளை வடிவமைத்தது.

இந்த ஆலோசனை மன்றத்தில் காலஞ்சென்ற துன் டாக்டர் இஸ்மாயில்,துன் டான் சியூ சின் மற்றும் துன் வீ.டி சம்பந்தன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நாட்டில் உள்ள பல இன மக்கள் ஒற்றுமையாகவும் நிலைத்தன்மையுடனும் இருக்க இந்தக் கோட்பாடுகள் உறுதுணையாக இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஏற்ப தேசிய ஒற்றுமை துறை அமைச்சு பல திட்டங்களை வடிவமைத்து வருவதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *