கோர விபத்தில் சம்பந்தப்பட்ட எஃப்.ஆர்.யூ உறுப்பினர்களை சுல்தான் நஸ்ரின் ஷா சந்தித்தார்!

- Muthu Kumar
- 18 May, 2025
தெலுக், இந்தான், மே 18-
கடந்த செவ்வாய்க்கிழமை, தெலுக் இந்தானில், கோர விபத்தில் சம்பந்தப்பட்ட எஃப். ஆர்.யூ எனப்படும் சேமப்படை வீரர்களை பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தெலுக் இந்தான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டிருக்கும் நால்வரையும், சாதாரண சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரையும், சுல்தான் நேரில் சென்று கண்டார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 44 வயதான கோபரல் ஹஸ்லிசால் முஹமட் அலி, 50 வயதான சார்ஜன் மஸ்லான் மாட், 39 வயதான கோபரல் முஹமட் இஷாக், 44 வயதான சார்ஜன் முஹமட் பாரி அலி, சாதாரண சிகிச்சை அறையில், சிகிச்சை பெற்றுவரும் 34 வயதான முஹமட் சுல்னாய்டி முஹமட் சுல்கிஃப்ளியையும் அவர் சந்தித்தார்.
சுமார் 30 நிமிடங்கள் அங்கு செலவழித்த சுல்தான் நஸ்ரின், பாதிக்கப்பட்டவர்களி குடும்ப உறுப்பினர்களுக்கு, நன்கொடையையும் வழங்கினார்.
Sultan Perak, Sultan Nazrin Shah melawat lima anggota simpanan tentera yang terlibat dalam kemalangan di Teluk Intan. Baginda menziarahi mereka di hospital dan menyampaikan sumbangan kepada keluarga mangsa sebagai tanda keprihatinan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *