12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் தேதி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

இந்துக்களால் புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின.இப்பாவங்களைக் களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள்.

அதற்குச் சிவபெருமான் கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது கதையாகும்.

இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்தத் தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.

வான் அறிவியல் படி பார்த்தால் சூரியனை விட மூன்று மடங்கு பெரியது மகா நட்சத்திரம். பூமியில் இருந்து அந்த நட்சத்திரம் 77 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.ஒளியின் வேகத்தில் சென்றால் கூட மகா நட்சத்திரத்தை அடைய 77 ஆண்டுகள் ஆகும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வந்தால் அது பவுர்ணமி.அந்த வரிசையில் மகா நட்சத்திரம் வந்தால் அது மாசி மகம். அது ஆண்டுக்கு ஒருமுறை வரும்.

ஆனால் மகாமகம் அன்று சூரியன், பூமி, சந்திரன், மகம் மற்றும் வியாழன் ஆகியவை நேர்கோட்டில் வருகின்றன. இதன் வானியல் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் மகாமகம் புனித நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

கும்பகோணத்தில் வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகத்துக்கான நாள் நிா்ணயம் தொடா்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கும்பகோணம் மகாத்மியம் குறித்து தினகர சா்மாவும், பஞ்சாங்க கணிதம் குறித்து சென்னை பாம்பு பஞ்சாங்கம் விஜயராகவனும், குரு பெயா்ச்சி குறித்து ஸ்ரீரங்கம் கோயில் வாக்கிய பஞ்சாங்க ஆசிரியா் கோபால குட்டி சாஸ்திரி, ஆற்காடு சீதா ராமய்யா் பஞ்சாங்க ஆசிரியா் கே.என். சுந்தர்ராஜன் அய்யா், ஈரோடு சபரி பஞ்சாங்க ஆசிரியா் எஸ்.என். சதாசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

ஏற்பாடுகளை ஸ்ரீ அபி முகேசுவரா் கோயில் குருக்களும், ஆகம வல்லுநருமான என். பிரசன்ன கணபதி சிவாச்சாரியாா், ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் என். தண்டபாணி சிவாச்சாரியாா் செய்திருந்தனா். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் 09.03.2028.நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *