ஆசியான் உச்சநிலை மாநாடு- 1,200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பதிவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 23-

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் 48ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, 1,200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பதிந்து கொண்டுள்ளனர்.

ஆசியான் தொடர்பான செய்திகளைச் சேகரிக்க பதிந்து கொண்டிருக்கும் அந்த எண்ணிக்கையில், 500 அனைத்துலக செய்தி நிறுவனங்களும் அடங்கியிருப்பதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாட்சில் கூறினார். இது அதிக எண்ணிக்கையிலான
பங்கேற்பு ஆகும். இது ஆசியான் உச்சநிலை மாநாடு. ஆசியான் ஜிசிசி மாநாடு மற்றும் ஆசியான் ஜிசிசி சீனா உச்சநிலை மாநாடு நடைபெறுவதை ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவதைக் காட்டுகின்றது.

அதோடு, பல்வேறு நாடுகளில் உள்ள செய்தி நிறுவனங்களின் மூலம் செய்திகள் ஒளிபரப்பப்படும்", என்றார் அவர்.மாநாடு நடைபெறவிருக்கும் 26. 27 ஆகிய இரு தினங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

Lebih 1,200 wartawan, termasuk 500 dari agensi berita antarabangsa, telah mendaftar untuk liputan Sidang Kemuncak ASEAN ke-48 yang akan diadakan pada 26-27 Mei, menunjukkan sambutan hangat dan liputan meluas acara tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *