தொடங்கியது ஆசியான் உச்ச நிலை மாநாடு! - டிரம்புக்கு அன்வார் கடிதம்

- Muthu Kumar
- 26 May, 2025
கோலாலம்பூர், மே 26:
ஆசியானின் உச்சநிலை மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நிலையில், பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு உறுப்பு நாடுகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் 46 வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முதன்மை அமர்வை துவக்கி வைத்து உரையாற்றிய அன்வார், விதிகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக அமைப்பு தன்னிச்சையான மற்றும் ஒருதலைபட்ச நடவடிக்கைகளால் சிதைக்கப்படுகிறது எனக் கூறினார்.
அமெரிக்காவின் அண்மைய பரஸ்பர வரி விதிப்பு மற்றும் உலகளாவிய வர்த்தக அமைப்பில் ஏற்பட்டு வரும் அழுத்தம் ஆகியவைற்றை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
இத்தகைய எதிர் வினைகள் அதிகம் இருந்தபோதிலும் ஆசியானின் மீட்சியில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.ஆசியான் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவைக் கோரி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim menyeru negara anggota ASEAN bersatu memelihara kepelbagaian. Beliau menyatakan kebimbangan terhadap tindakan unilateral kuasa besar dan menegaskan keyakinan terhadap kebangkitan ASEAN di Sidang Kemuncak ASEAN ke-46 di Kuala Lumpur.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *