ஆசியான் மாநாடு... பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்! - பிளஸ் அறிவுறுத்து

- Shan Siva
- 22 May, 2025
கோலாலம்பூர், மே 22: மலேசியாவில் தொடங்கவிருக்கும் 46வது
ஆசியான் உச்சநில மாநாட்டை முன்னிட்டு, நாட்டில் பல சாலைகள் படிப்படியாக மூடவிருப்பதால் பொதுமக்கள் தங்கள் பயணங்களை
முன்கூட்டியே திட்டமிடுமாறு பிளஸ் மலேசியா பெர்ஹாட்
கேட்டுக்கொண்டுள்ளது.
இம்மாநாடு நடைபெறும் காலகட்டங்களில்
அனைத்துலக பிரதிநிதிகளின் நடமாட்டத்தை சுமூகமாக்கும்
வகையில் அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து புலனாய்வு
மற்றும் அமலாக்கத் துறையின் அறிவுறுத்தல்களைப்
பின்பற்றி பிளஸ் நெடுஞ்சாலைகளில் உள்ள பல பகுதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று பிளஸ்
மலேசியா கூறியது.
இந்த சாலை மூடல்
நடவடிக்கை மே 23 முதல் மே 26 வரை காலை 7.00 மணி முதல் மே 28 ஆம் தேதி காலை 8.00 மணி வரை அமலில் இருக்கும் என்று
பிளஸ் மலேசியா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மாநாடு நடைபெறும்
காலகட்டத்தில் போக்குவரத்து நடவடிக்கைகளை சீராக நடத்துவதற்குத் தேவையான
நடவடிக்கைகளை பிளஸ் மலேசியா எடுத்துள்ளது. மேலும், பிளஸ் நெடுஞ்சாலைகளில் மாநாட்டுப் பிரதிநிதிகளின்
பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை எளிதாக்க அதிகாரிகளுடன், குறிப்பாக போக்குவரத்து
போலீசாருடன் அந்நிறுவனம் நெருக்கமாகச் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (கே.எல்.ஐ.ஏ.) மற்றும் சுபாங் விமான தளத்திற்கு செல்லும் மற்றும் அல்லது அங்கிருந்து வெளியேறும் வாகனமோட்டிகள் தாமதங்களைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!
Sempena Sidang Kemuncak ASEAN ke-46, beberapa jalan di lebuh raya PLUS akan ditutup sementara mulai 23 hingga 28 Mei. Orang ramai dinasihatkan merancang perjalanan awal bagi mengelak kesesakan, terutama ke KLIA dan Lapangan Terbang Subang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *