ஆசியான் உச்சநிலை மாநாடு-அமைச்சர்கள் சிலர் மலேசியா வந்தடைந்தனர்!

- Muthu Kumar
- 25 May, 2025
சிப்பாங், மே 25-
அடுத்த வாரம் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் 46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சர்கள் சிலர் நேற்று மலேசியா வந்தடைந்தனர்.
பஹ்ரேன் நாட்டு அமைச்சர் டாக்டர் அப்துல் லாதிஃப் ரஷிட் நேற்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ வந்தடைந்தார். அதோடு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தமது துணைவியார், பேராளர்களுடன் காலை 10 மணிக்கு வந்தடைந்தார். அவரை தொடர்ந்து, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியானோ அவரின் தனிப்பட்ட விமானத்தின் மூலம் காலை 11.36 மணிக்கு கே.எல்.ஐ.ஏ 1 விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இதனிடையே, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், அவரின் துணைவியார், ஆசியானின் பொதுச் செயலாளர் டாக்டர் காவோ கிம் ஹௌர்ன், ஐக்கிய அரபு சிற்றரசின் அமைச்சர் கலீஃபா ஷாஹீன் அல் மரார், சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் அப்துல் ரஹ்மான் இப்ராஹிம் அல் ரஸ்ஸி ஆகியோர் பூங்கா ராயா
வளாகம் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.எ 1-யை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நாளை 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டில் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Beberapa menteri luar negara tiba di Malaysia menjelang Sidang Kemuncak ASEAN ke-46 yang bakal berlangsung pada 26 dan 27 Mei. Antara yang tiba ialah menteri dari Bahrain, Singapura, dan Indonesia serta pemimpin dari Vietnam, UAE dan Arab Saudi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *