படாவி, மகாதீரைப் போல பேராசை கொண்டவர் இல்லை! – அம்னோ

top-news

ஏப்ரல் 18,

மறைந்த முன்னாள் பிரதமர் Ahmad Badawi அம்னோவுக்கு விசுவாசமானத் தலைவர் என்றும் அவர் மகாதீர் போன்ற சுயநலவாதியானத் தலைவர் அல்ல என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Puad Zarkashi தெரிவித்துள்ளார். படாவியின் சகாப்தம் முடிவுக்கு வருவதை உணர்ந்து அவர் அமைதியாக விலகினார். மகாதீரைப் போல பேராசைக் கொண்டவராக அவர் இல்லை என்றும் படாவியிடமிருந்து மகாதீர் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருப்பதாகவும் Datuk Puad Zarkashi தெரிவித்தார். 

மகாதீர் அம்னோவால் வளர்ந்து, அம்னோவால் உச்சம் அடைந்து மீண்டும் அம்னோவையே அழிக்க நினைப்பவர். படாவி அம்னோவிலேயே இருந்தார். அம்னோ உறுப்பினர்களோடு படாவிக்குக் கருத்து முரண்கள் இருந்தாலும் அவர் அம்னோவுக்கு விசுவாசமாகவும் அம்னோவின் நலன் விரும்பியாகவே இருந்தார். படாவி தன்னுடைய ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் பிரதமராக விரும்பவில்லை. ஆனால் மகாதீர் அப்படியில்லை. இதற்கெல்லாம் நேர் எதிரானவர் மகாதீர் என Datuk Puad Zarkashi தெரிவித்துள்ளார்.

Datuk Puad Zarkashi memuji Allahyarham Ahmad Badawi sebagai pemimpin setia UMNO yang tidak tamak kuasa, berbeza dengan Tun Mahathir yang disifatkannya sebagai mementingkan diri dan cuba menghancurkan parti walaupun pernah mencapai kemuncak bersama UMNO.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *