அமைச்சரவையில் அம்னோவுக்கு மற்றொரு அமைச்சர் பதவி? ZAHID HAMIDI விளக்கம்!

- Sangeetha K Loganathan
- 24 May, 2025
மே 24,
பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவர் போட்டியின் எதிரொலியாக அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அம்னோ மேலுமோர் அமைச்சர் பதவியைக் கேட்காது என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Ahmad Zahid Hamidi இன்று விளக்கமளித்தார். பொருளாதார அமைச்சரான Datuk Seri Rafizi Ramli பி.கே.ஆர் துணைத் தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்தால் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் கடந்த மே 10 ஆம் நாள் அறிவித்திருந்தாலும் அவர் அமைச்சராக நீடிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
பி.கே.ஆர் கட்சியின் உள்விவகாரங்களால் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமைக் கூட்டணியின் ஒப்பந்தத்தின்படி ஒரு கட்சிக்கானப் பொறுப்பை மற்றொரு கட்சி ஒரு போது கோராது என்றும் கூட்டணி ஒப்பந்தத்தை அம்னோ முழுமையாக ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் Datuk Seri Ahmad Zahid Hamidi விளக்கமளித்தார். குறிப்பிட்ட அமைச்சர் பதவி சம்மந்தப்பட்ட கட்சியின் தலைமையின் முடிவில் இருப்பதாகவும் மற்ற கூட்டணிக் கட்சிகள் அதில் தலையிடாது என்றும் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார். அவரவர் சொந்த கட்சியின் வேலைகளைப் பார்த்தாலே சிறந்த அரசியல் கட்சியை வழிநடத்த முடியும் என Datuk Seri Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார்.
Zahid Hamidi menegaskan UMNO tidak akan menuntut jawatan menteri tambahan walaupun berlaku perubahan dalam kabinet akibat pemilihan PKR. Beliau menghormati perjanjian gabungan dan menyokong Rafizi Ramli kekal sebagai Menteri Ekonomi walaupun tewas dalam pemilihan parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *