பள்ளி மீதான இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலி! மலேசியா கடும் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட்  12-  காஸா நகரில்‌ பாலஸ்தீனர்கள்‌ அடைக்கலம்‌ புகுந்திருந்த அல்‌-தாபின்‌ பள்ளி மீது இஸ்ரேலியர்கள்‌ நேற்று நடத்திய தாக்குதலில்‌ நூற்றுக்கும்‌ மேற்பட்டவர்கள்‌ உயிரிழந்தனர்‌. அவர்களுள்‌ பலர்‌ குழந்தைகளும்‌ பெண்களும்‌ ஆவர்‌. மனிதநேயமற்ற  இத்தாக்குதலுக்கு மலேசியா கடுமையாகக்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள்‌ தங்கியிருந்த பள்ளி மீது இஸ்ரேல்‌ வலியத்‌ தாக்குதல்‌  நடத்தியிருக்கிறது. இது அனைத்துலகச்‌ சட்டத்திற்கும்‌ அனைத்துலக மனிதநேய சட்டத்திற்கும்‌ மனித உரிமைகள்‌ சட்டத்திற்கும்‌ புறம்பானதாகும்‌. மேலும்‌, மனிதநேயத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடூரச்‌ குற்றச்‌ செயலாகவும்‌ அது விளங்குகிறது என்று மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில்‌ குறிப்பிட்டுள்ளது. 

உயிரிழந்தவர்களுள்‌ பலர்‌ குழந்தைகள்‌ ஆவர்‌. எண்ணற்ற பலரும்‌ அத்தாக்குதலில்‌ படுகாயமடைந்துள்ளனர்‌. மருந்து பற்றாக்குறை காரணமாக அவர்களுள்‌ பலர்‌ உயிரிழக்க வேண்டி வரலாம்‌. அமைதியை ஏற்படுத்த தாங்கள்‌ விரும்பவில்லை என்பதை இதன்‌ மூலம்‌ இஸ்ரேல்‌ தெளிவாக உணர்த்தியுள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.

பெண்களையும்‌ குழந்தைகளையும்‌ முதியவர்களையும்‌ இஸ்ரேலின்‌ ஆக்கிரமிப்புப்‌ படையினர்‌ கொன்று குவித்துவரும்போது எவ்வித மனஉறுத்தலுமின்றி அனைத்துலகச்‌ சமூகம்‌ கைகட்டி வேடிக்கை பார்த்துக்‌ கொண்டிருக்கிறது. இதனை அனைத்துலக நாடுகள்‌ இனியும்‌ சகித்துக்‌ கொண்டிருக்கக்‌ கூடாது. இஸ்ரேலின்‌ மூர்க்கத்தனத்தையும்‌ அது கண்டும்‌ காணாமல்‌ இருக்கக்‌. கூடாது என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. 

தற்போது நடைபெற்றுவரும்‌ அமைதிப்‌ பேச்சுவார்த்தையின்‌ மூலம்‌ நிரந்தர போர்நிறுத்தத்திற்கு வழிகாண முடியும்‌ என்று இஸ்ரேல்‌ கூறிவருவது வெற்று வாக்குறுதிகள்‌ ஆகும்‌. ஏதுமறியாத பாலஸ்தீனர்களைக்‌ கொன்று குவித்து வருவதை உடனடியாக நிறுத்தக்‌ கோரி இஸ்ரேலுக்கு. மலேசியா நெருக்குதல்‌ கொடுக்க வேண்டும்‌. அந்த யூத நாட்டின்‌ தோழமை நாடுகளின்‌ உதவியோடு இதனை மலேசியா செய்ய வேண்டும்‌. சுதந்திரமும்‌ இறையாண்மையும்‌ கொண்ட ஒரு பாலஸ்தீன நாடு உருவாகும்வரை மலேசியா ஓயாது என்றும்‌ புத்ராஜெயா நேற்று வலியுறுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *