இன்னும் நூற்றுக்கணக்கான 'இஸ்மாயில் ஹனியே' பிறப்பார்கள்! இஸ்ரேலுக்கு சனூசி நினைவூட்டல்!
- Shan Siva
- 01 Aug, 2024
அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 1: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை
செய்யப்பட்டதற்கு கெடா மாநில அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முழுமையான
விசாரணையைக் கோருகிறது என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி எம்.டி
நோர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள
தெஹ்ரானில் அவர் தங்கிய இல்லத்தில் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
மிகவும் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால்,
ஈரான் இஸ்லாமியக் குடியரசு அரசாங்கம் ஹமாஸின்
வலுவான ஆதரவாளராக அறியப்படுகிறது மற்றும் பாலஸ்தீனத் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில்
தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. எனவே தீவிர
விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புதிதாக
பதவியேற்றுள்ள ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானுக்கு இது ஒரு பெரும் சவாலாகும்
என்று அவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் மூத்த
தலைவரின் மரணம் குறித்து பலர் துக்கத்தில் இருக்கும் வேளையில், காஸாவில் எதிர்ப்புப் போராளிகளின் செயல்பாட்டை
அது முடக்கிவிடாது என்று சனுசி கூறினார்.
இஸ்மாயிலின்
மரணத்தைத் தொடர்ந்து, ஹமாஸ்
இயக்கத்தின் "முக்கிய மூளையை" தாங்கள் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் நம்பலாம்,
ஆனால், அவர்களின் இக்கொடூரமான
செயல் இன்னும் பெரிய விளைவைத் தூண்டும். டஜன் கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான 'இஸ்மாயில் ஹனியே' பிறப்பார்கள் என்று அவர் எச்சரித்தார்.
இஸ்ரேல்
இஸ்மாயிலைக் கொல்லவில்லை, மாறாக அவரை
சொர்க்கத்திற்கு அனுப்பியுள்ளனர் என்று அவர்
கூறினார்.
தெஹ்ரானில்
புதன்கிழமை அதிகாலை ஹனியே படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஈரானின் புதிய
அதிபருக்கான பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு,
ஹனியேவின் மரணத்தை ஈரானின் புரட்சிகர காவலர்கள்
உறுதி செய்தனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *