சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இன்று பூமிக்கு திரும்புகிறார்கள்- நாசா அறிவிப்பு!

- Muthu Kumar
- 18 Mar, 2025
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் மலேசிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது.விண்வெளியில் 9 மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் குழு சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றது.
டிராகன் விண்கலத்தில் அமெரிக்கா, ரஷ்யாவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் அடங்கிய க்ரூவ்-10 குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதனையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் டிராகன் விண்கலத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்புகின்றனர். மலேசிய நேரப்படி இன்று காலை 7:45 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஏறத்தாழ 17 மணி நேர பயணத்திற்குப் பின் புதன்கிழமை அதிகாலை 12:58 மணி அளவில் குழு பூமியை வந்தடையும் என நாசா கூறியுள்ளது. அதேநேரம் வானிலை சூழலைப் பொறுத்து இந்த பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என நாசா அறிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *