PKR துணைத் தலைவராக நூருல் இஸா வெற்றி! வெற்றிபெற்றவர்கள் விவரம் (அதிகாரப்பூர்வமற்ற தகவல்)

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 23: பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நூருல் இஸா அன்வார் வெற்றிபெற்றுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு ரஃபிசியும் நூருல் இஸ்ஸாவும் நேரடிப் போட்டியில் ஈடுபட்டனர். 2022 கட்சித் தேர்தலில் ரஃபிசி வெற்றி பெற்றார். அப்போது போட்டியிடாத நூருல் இஸ்ஸா, கட்சியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கட்சியின் அடுத்த துணைத் தலைவர் போட்டியில் களம் இறங்கினார் நூருல் இஸா. இதனை அடுத்து நடப்பு துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கும், நூருல் இஸாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதோடு இது பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து இன்று உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் நூருல் இஸா துணைத் தலைவர் பதவியில் வெற்றிபெற்றுவிட்டதாகவும், ரஃபிஸி ரம்லி தோல்வியைத் தழுவியிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன..

பிகேஆர் மத்திய தலைமைத் தேர்தல்களுக்கு மொத்தம் 32,030 பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

முடிவுகள் இன்னும் எண்ணப்பட்டு வருகின்றன, இரவு 9 மணிக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெற்றிபெற்றவர்கள் (அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்)

தலைவர்: ANWAR BIN IBRAHIM

துணைத் தலைவர் : NURUL IZZAH BINTI ANWAR

 உதவித் தலைவர்கள்:

1. AMIRUDIN SHARI

2. RAMANAN RAMAKRISHNAN

3. AMINUDDIN BIN HARUN

4. CHANG LIH KANG

 மத்திய செயலவை உறுப்பினர்கள்:

1. FAHMI FADZIL

2. ADAM ADLI

3. CHAN MING KAI

4. GUNARAJAH

5. AZLAN HELMI

6. DR MASZLEE

7. GOH CHOON AIK

8. NURIN AINA

9. ELIZABETH WONG

10. ABG ZULKEFLI

11. SITI AISHAH

12. ALTIMET

13. AKMAL NASIR

14. AMIDI

15. LEE CHEAN CHUNG

16. AZAM KARAP

17. SYED IBRAHIM

18. KUMARESAN

19. SIM CHOON SIANG

20. SIVAMALAR

 மகளிரணி தலைவர்: YB FADHLINA bte SIDEK

 மகளிரணி உதவித் தலைவர்:  YB JUWAIRIYA BTE ZULKIFLI 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *