ஹமாஸ் தலைவர் கொலை மூலம் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது-கமலா ஹாரிஸ்!
- Muthu Kumar
- 18 Oct, 2024
இஸ்ரேல் படைகளால் நேற்று ஹமாஸ் தலைவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதனை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ள நிலையில், நீதி நிலை நாட்டப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் துணை அதிபரும், அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீரென ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன. இதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. மறுபுறும், இந்த பதற்றத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய அமைப்பு, இஸ்ரேலிருந்து சிலரை பணய கைதிகளாக பிடித்து வந்தது.
இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கு பெரும் இழுக்காக பார்க்கப்பட்டது. அமெரிக்கா ஆதரவுடன் மத்திய கிழக்கில் குட்டி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, அதற்கு ராஜாவாக இருக்கும் எங்கள் மீதே தாக்குதல் நடத்திவிட்டாயா? என அந்நாட்டு அதிபர் நெதன்யாகு கண் சிவந்தார். உடனடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது போர் அறிவிக்கப்பட்டது. போரின் நோக்கம் ஹமாஸ் எனும், பாலஸ்தீன விடுதலை அமைப்பை அழிப்பதுதான்.
ஏறத்தாழ ஓரண்டுக்கு பிறகு சமீபத்தில் ஈரானில் வைத்து, ஹமாஸின் அரசியல் தலைவரை இஸ்ரேல் போட்டு தள்ளியது. மறுபுறம், நேற்று நடந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவரான சின்வார் கொல்லப்பட்டார்.
யாஹா சின்வார் ஹமாஸின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அந்த அமைப்பின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தென்பட தொடங்கின. குறிப்பாக, தாக்குதல்கள் ஏதும் பெரிய அளவுக்கு நடத்தாது போன்று அமைதி காக்கப்பட்டது. ஆனால் மொத்தமாக வைத்து 2023 அக்டோபரில் ஹமாஸ் தனது பழியை தீர்த்துக்கொண்டது. இந்த தாக்குதல்தான், இப்போது நடக்கும் போருக்கு முக்கிய காரணம்.
போரில் இதுவரை 42,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். போரை உடனே முடிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியது. ஹமாஸ் இதற்கு ஒப்புக்கொண்டாலும், இஸ்ரேல் இறங்கி வர மறுத்தது. இப்படி தொடர்ந்து போரை நடத்தி நேற்று ஹமாஸ் தலைவர் சின்வாரை கொலை செய்திருக்கிறது.
இது குறித்து கமலா ஹாரிஸ், நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். "காசாவில் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு சின்வார்தான் பொறுப்பு. சின்வார் கையில் அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் ரத்தக்கறை படிந்திருக்கிறது. அவர் உயிரிழந்ததன் மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்" என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடனும் இதையே கூறியிருக்கிறார். ஆனால், சின்வார் கொல்லப்பட்டாலும், போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்திருக்கிறார்.
காசாவில் கான்யூனிஸ் அகதிகள் முகாமில் 1962ல் பிறந்த சின்வார், சிறு வயது முதல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை பார்த்து வளர்ந்து வந்திருக்கிறார். மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமியர்கள் இருப்பினும், இஸ்ரேல் மட்டுமே யூதர்களின் நாடாக இருக்கிறது. இது பிரச்னையில்லை, இந்நாடு அமெரிக்கா ஆதரவுடன் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததுதான் பஞ்சாயத்துக்கு காரணம்.
இதையெல்லாம் பார்த்து வளர்ந்த சின்வார், இயல்பிலேயே இஸ்ரேல் எதிர்ப்ப மன நிலையுடன் இருந்தார். இது அவரை முஸ்லீம் பிரதர்வுட் எனும் அமைப்பை நோக்கி நகர்த்தியது. இங்குதான் சின்வார் பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் தொடர்பை பெறுகிறார். பின்னாட்களில் இந்த அமைப்புகளில் முதன்மையாக உள்ள ஹமாஸை நோக்கி நகர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஹமாஸின் தலைவர் பதவியை எட்டிய இவர், இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்டு அதை கச்சிதமாக செய்து முடித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *