புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து வீடுகளுக்காக மொத்தம் RM 40 மில்லியன்! - அமிருடின் ஷாரி

- Shan Siva
- 30 Apr, 2025
கோலாலம்பூர்: ஏப்ரல் 1 ஆம் தேதி சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தில் சேதமடைந்த வீடுகளை மீட்டெடுப்பதற்காக மொத்தம் RM40 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.
பழுதுபார்ப்புகளுக்கான
ஒதுக்கீட்டில் மத்திய அரசு நிதி மற்றும் பொது பங்களிப்புகள் அடங்கும் என்று அவர்
கூறினார்.
புத்ரா ஹைட்ஸ்
பகுதியில் உள்ள வீடுகளுக்கான பழுதுபார்ப்புகளை வீட்டுவசதிப் பகுதியை உருவாக்கிய
சைம் டார்பி மேற்கொள்ளும் என்றும், கம்போங் சுங்கை
பாருவில் உள்ள வீடுகளை SPNB மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
மறுசீரமைப்பு
செயல்முறை மின் வயரிங் போன்ற அடிப்படை பயன்பாடுகளில் கவனம் செலுத்தப்படும் என்று அவர்
தெரிவித்தார்.
RM30,000 க்கும் குறைவான சிறிய சேதங்களுக்கு, வீட்டு உரிமையாளர்கள் பழுதுபார்க்கும் பணிகளை தாங்களாகவே மேற்கொள்ளலாம் என்றுஜ், பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து (PBT) பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் அவர் இன்று ஷா ஆலமில் உள்ள மாநில செயலகக் கட்டிடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!
Kerajaan Selangor memperuntukkan RM40 juta membaik pulih rumah rosak akibat letupan gas Putra Heights. Sime Darby dan SPNB kendalikan pembaikan mengikut kawasan. Kerajaan pusat, sumbangan awam turut terlibat. Pemilik boleh baiki sendiri kerosakan kecil dan tuntut bayaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *