அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய 40 வயது பெண் கைது!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
போக்குவரத்து விதிகளை மீறி பள்ளி வளாகம் அமைந்துள்ள சாலையில் அபாயகராக வாகத்தைச் செலுத்திய 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக Segamat, மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah தெரிவித்தார். செகாமாட்டில் உள்ள Bukit Hampar சாலையில் நீல நிற Perodua Bezza ரக வாகனம் கட்டுப்பாட்டை மீறி அபாயகரமாகச் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வாகனமோட்டியை அடையாளம் கண்டு நேற்றிரவு கைது செய்ததாக Segamat, மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாகவும் தற்போது பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 40 வயது பெண் வாகனமோட்டி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Segamat, மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக எந்தவொரு குற்றப்பதிவுகள் இல்லை என்பதையும் Segamat, மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Zamry Marinsah உறுதிப்படுத்தினார்.
Seorang wanita berusia 40 tahun ditahan selepas memandu secara berbahaya di jalan sekolah di Segamat. Tindakannya dirakam dan tular di media sosial. Polis mengenal pasti dan menahannya tanpa sebarang rekod jenayah terdahulu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *