போலி முதலீட்டில் RM109,000 இழந்த பெண்!

- Sangeetha K Loganathan
- 26 May, 2025
மே 26,
சமூகவலைத்தளத்தின் முதலீட்டு விளம்பரத்தால் கவரப்பட்ட 40 வயது அலுவலக ஊழியர் தனது சேமிப்புப் பணமான RM109,000 பணத்தை இழந்துள்ளதாக டுங்கூன் மாவட்டக் காவல் ஆணையர் Maizura Abdul Kadir தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முகநூலில் சம்மந்தப்பட்ட முதலீடு தொடர்பான விளம்பரத்தைக் கண்டதும் அறிமுகமில்லாத ஆடவரின் வழிகாட்டலில் RM 3,000 பணத்தை முதலீடு செய்துள்ளார்.
2 வாரங்களுக்குப் பிறகு RM 2,835 ரிங்கிட் லாபம் பெற்றதாகவும் லாபப் பணத்தைப் பரிவர்த்தனை செய்யாமல் தொடர்ந்து சிறுக சிறுக வங்கியின் மூலமாகப் பணத்தை முதலீடு செய்த 40 வயது பெண் கடந்த ஏப்ரல் முதல் கடந்த வாரம் வரையில் மொத்தமாக RM109,000 பணத்தைப் 7 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ததும் சம்மந்தபட்ட முதலீடு வலைத்தளம் முடக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் ஏமாற்றத்துடன் புகார் அளித்துள்ளார்.
Seorang wanita berusia 40 tahun kerugian RM109,000 selepas terpedaya dengan skim pelaburan palsu yang diiklankan di Facebook. Mangsa memindahkan wang secara berperingkat ke tujuh akaun bank berbeza sebelum laman web pelaburan itu ditutup secara tiba-tiba.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *