உங்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் அதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்-விஜய்!

top-news
FREE WEBSITE AD

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில், 4ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார்.அப்போது, நிர்வாகிகள் மத்தியில் விஜய் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகிகளிடம் உரையாற்றிய அவர், “தமிழக மக்கள் எனக்கு நிறைய செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஏதாவது திருப்பி செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். சினிமா முதல் அரசியல் வரை எனது ரசிகர்களாகிய நீங்கள் தான் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளீர்கள்.

தமிழக மக்கள் என்னை எங்கு அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார்களோ, அதே இடத்தில் உங்களை அமர வைத்து அழகு பார்ப்பதுதான் எனது லட்சியம். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அப்போது நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்” என பேசியுள்ளார்.

முன்னதாக, "தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் கொடியை விஜய் ஏற்றி வைத்தார். பின்னர், கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *