சட்டவிரோதமாக ஒரு நாளுக்கு RM 1,500 வரையில் சம்பாதித்த 94 வெளிநாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
பூச்சோங்கில் உள்ள வணிக வளாகங்களில் தேசியக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக வணிகத்தில் ஈடுபட்ட 94 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகத் தேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 நாள்களாக மாறு வேடத்தில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளை நோட்டமிட்டதாகவும் இன்று இரவு மொத்தம் 24 கடைகளில் அதிரடி சோதனையை மேற்கொண்டதில் 247 வெளிநாட்டு ஆண்கள் 85 வெளிநாட்டு பெண்கள் 38 உள்ளூர்வாசிகளைச் சோதனையிட்டதில் 23 முதல் 35 வயதுள்ள 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலமாக வணிகக் கடைகளுக்கான உரிமங்களைப் பெற்றும் மலிவு விலையானப் பொருள்களை அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் ஒரு நாளுக்கு RM 50, முதல் RM 1,500 வரையில் வருமானம் பெறுவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 84 வெளிநாட்டினர்களில் 72 ஆண்கள் என்றும் 22 பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் Thailand, Bangladesh, Indonesia, Myammar, Pakistan, Yemen, Vietnam, Egypt, Palestin, India ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சிலரிடம் முறையான ஆவணங்கள் இருந்தும் வணிகத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Seramai 94 warga asing ditahan dalam serbuan di Puchong selepas didapati menjalankan perniagaan secara haram. Mereka memperoleh pendapatan harian antara RM50 hingga RM1,500. Penahanan melibatkan warga Thailand, Bangladesh, Indonesia, Myanmar, Pakistan dan beberapa negara lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *