சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 23 வெளிநாட்டினர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 17 Apr, 2025
ஏப்ரல் 17,
கோலா திரங்கானுவின் பல்வேறு பகுதிகளில் திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 23 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, நேற்று காலை 9 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை நடவடிக்கையில் 37 வெளிநாட்டினர்களைச் சோதனையிட்டதாகவும் இரவு 8 மணி வரையில் சோதனை நடத்தப்பட்டதில் 23 வெளிநாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலா திரங்கானுவில் உள்ள பகுதிகளில் வெளிநாட்டினர் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெற்ற நிலையில் இச்சோதனையை மேற்கொண்டதாகத் திரங்கானு மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட்டவர்கள் Myanmar, Bangladesh, Mesir, Syria, Yaman ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 22 முதல் 57 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட வெளிநாட்டினர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நம்பப்படும் 2 உள்ளூர் ஆடவர்களையும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seramai 23 warga asing ditahan dalam operasi Jabatan Imigresen Terengganu kerana tinggal secara haram di Malaysia. Operasi di beberapa lokasi di Kuala Terengganu itu berdasarkan aduan orang awam mengenai peningkatan pergerakan warga asing di kawasan tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *