KKR முதலீட்டு மோசடியில் RM224,403 இழந்த முதியவர்!

top-news

மே 29,

தனியார் நிறுவனத்தின் பொறியியளார் அங்கீகரிக்கப்படாத முதலீட்டு நிறுனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகச் சிபூ மாவட்டக் காவல் ஆணையர் Zulkipli Suhaili தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் சமூகவலைத்தளத்தில் பெறப்பட்ட விளம்பத்தில் உள்ள புலன எண்ணுடன் தொடர்புக் கொண்டதாகவும் அதிக லாபம் பெறும் ஆசையில் முதற்கட்டமாக RM224,403 பணத்தை முதலீடு செய்த அடுத்த 2 வாரத்தில் RM750,000 லாபம் பெற்றதாகவும் ஆனால் லாபப் பணத்தைப் பெற முடியாத நிலையில் வரி செலுத்தும்படி அறிவுருத்தப்பட்டதும் வரி பணத்தைச் செலுத்தவும் ஒப்புக் கொண்டதாகவும் ஆனால் பதிவிறக்கம் செய்யப்பட்ட KKR முதலீட்டு நிறுவனத்தில் அகப்பக்கம் முடக்கப்பட்டிருந்த நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகப் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் சிபூ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட KKR நிறுவனம் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர் செலுத்திய பணம் KKR நிறுவனத்தின் கணக்கில் இல்லை, அது உள்ளூர் நபருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு என்றும் சிபூ மாவட்டக் காவல் ஆணையர் Zulkipli Suhaili தெரிவித்தார். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணையை மேற்கொண்டதாகவும் பணத்தைப் பெற்ற வங்கிக் கணக்குகள் தற்போது செயற்பாட்டில் இல்லை என்றும் சிபூ மாவட்டக் காவல் ஆணையர் Zulkipli Suhaili தெரிவித்தார்.

Seorang warga emas berusia 60 tahun kerugian RM224,403 selepas melabur dalam skim pelaburan palsu atas nama syarikat KKR. Polis mengesahkan syarikat itu tiada kaitan dengan pelaburan berkenaan dan akaun bank yang terlibat bukan milik KKR.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *